உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் விஜய்..

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தை திறந்துவைத்து 14000 பேருக்கு 100 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக முதலமைச்சர் விஜய் வருகிற 2 ந்தேதி புதுக்கோட்டை செல்கிறார். இதற்கான ஏற்பாடுகளை பார்வையிட்ட அமைச்சர் பர்வேஸிடம் , எல்லாம் தங்களின் திட்டம் என்ற திமுகவின் முன்னாள் அமைச்சர்களின் விமர்சனம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை திமுக ஆட்சியில் திறக்கவில்லையா? என்றும் திமுகவினர் சொந்த நிதியில் இருந்தா மக்களுக்கு திட்டங்களை செயல்படுத்தினார்கள்? எல்லாம் அரசு நிதி என்றும் பதில் அளித்தார்