IBC Tamil
எதிர்க்கட்சிகளின் பில்லி சூனிய அரசியல்...! மேடையில் கிண்டலடித்த ஜனாதிபதி
நாட்டின் தற்போதைய அரசியல் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியாமல் எதிர்க்கட்சியினர் பில்லி சூனிய வழிபாடுகளில் இறங்கியுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சாடியுள்ளார். தேசிய அறிவுஜீவிகள் அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். விரக்தியின் உச்சக்கட்டமாக, எதிர்க்கட்சியினர் இவ்வாறு விசித்திரமான மற்றும் விகாரமான செயல்களில் ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். களிமண் பொம்மை இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்...