உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

தீட்சிதர்களின் அதிகாரத்தை நீக்கிய தீர்ப்பு : பட்டாசு வெடித்துக் கொண்டாடிய சிபிஎம் கட்சியினர்

சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் தொடர்பாக, தீட்சிதர்களிடம் இருந்து நிர்வாக அதிகாரத்தை நீக்கி, கோயிலை நிர்வகிக்க இரு நீதிபதிகள் கொண்ட நிர்வாகக் குழுவை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை வரவேற்று, சனிக்கிழமை சிதம்பரம் நடராஜர் கோயிலின் கீழ கோபுரம் எதிரே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பட்டாசு வெடித்தும், நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்று முழக்கங்கள் எழுப்பியும் கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழ.வாஞ்சிநாதன், நகர்ம…