Polimer News
கயல்விழி அழகிரி மீதான வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு..!
சென்னை அடையாறு எஸ்.பி.ஐ. வங்கி மேலாளரின் கன்னத்தில் அறைந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகரியின் மகள் கயல்விழி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக 4 வாரங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை சாஸ்திரி நகர் போலீசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கயல்விழி மீது கொலை மிரட்டல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், வழக்கை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவை கயல்விழி வாபஸ் பெற்ற நிலையில், இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.