Nakkheeran
”ஆசிரியரின் முன்பே நடந்த அதிர்ச்சி சம்பவம்”; குடும்பத்தாருக்கு தைரியம் சொன்ன முதல்வர்
பள்ளியில் நடந்த கொடூர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாருக்கு முதல்வர் சந்திரபாபு ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும், அரசு அனைத்து வழிகளிலும் குடும்பத்திற்குத் துணையாக இருக்கும் என்றும், குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தரப்படும் என்றும் உறுதியளித்தார். ஆந்திரா மாநிலம், அனந்தபூர் மாவட்டம் ரப்தாடு ஜில்லா பரிஷத் உயர்நிலைப் பள்ளியில், ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருந்தபோதே வகுப்பறைக்குள் புகுந்த 21 வயது வாலிபர் (ஹேமந்த்), பத்தாம் வகுப்பு மாணவி மீது மின்சார இயந்திர சங்கிலி ரம்பம் மூலம் கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளார். அப்போது, இந்த தாக்குதலைத் தடுக்க முயன்ற மற்றொரு மாணவிக்கும் பலத்த…