Nakkheeran
”நீதிபதிகள் நியமனத்தில் பாஜக அரசின் தலையீடு?”; நாட்டின் ஜனநாயகம் குறித்து ஜெய்ராம் ரமேஷ் வேதனை
நீதிபதிகள் நியமனத்தில் ஒன்றிய பாஜக அரசின் தலையீடு இருப்பதாக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், ”வித் அவுட் ஃபியர் ஆர் ஃபேவர்” என்ற தலைப்பில் புத்தகம் எழுதியுள்ளார். இன்னும் வெளியிடப்படாத அந்த புத்தகத்தில், அவர் குறிப்பிட்டுள்ள பல்வேறு விஷயங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, நீதிபதிகளின் நியமனங்களில் பாஜக ரசின் தலையீடு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள பதிவில், ”முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் எழுத…