உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

நேரு மீது வழக்குப் பதிவு செய்ய தடை இல்லை: ஐகோர்ட் அதிரடி உத்தரவு

நகராட்சி நிர்வாகத்துறையில் அதிகாரிகள் நியமனத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும், கே.என்.நேருவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எந்தத் தடையும் இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தத் தீர்ப்பு திமுகவுக்கு அரசியல் ரீதியாகப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகத்துறையில் 2,538 உதவிப் பொறியாளர்கள், இளநிலைப் பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றதாகப் புகார் எழ…