IBC Tamil
துறவி என கூறிக்கொண்டு பலகோடி ரூபாய் சொகுசு வாகனத்தில் பிக்கு: சமூக வலைத்தள காணொளியால் சர்ச்சை
விஹாரமஹாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டத்தின்போது, கடந்த ஒக்டோபர் 21ஆம் திகதியளவில் சமூக வலைத்தளங்களில் வெளியான காணொளியொன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தன்னை அரஹந்தர் எனக் கூறிவரும் பிட்டிதுவே சிறிதம்ம தேரர் எனப்படும் சிறி சமந்தபத்ர தேரர், சுமார் 3 கோடியே 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான சொகுசு வாகனத்தில் பயணிப்பதைக் காட்டும் காணொளியே இவ்வாறு பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. குறித்த காணொளியில், மஞ்சள் மற்றும் செம்மஞ்சள் நிறத் தோல் இருக்கைகள், LED...