உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

”இந்தியா கூட்டணி சார்பில் பிரமாண்ட பேரணி”; வழித்தடத்துடன் அழைப்பு விடுத்த ராகுல்

நாளை (01-11-26) டெல்லியில் உள்ள ’ராம் லீலா’ மைதானத்தில் ’இந்தியா’ கூட்டணி சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பேரணியில் கலந்துகொள்ளக் காங்கிரஸ் மூத்தலைவர்கள் மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி, இந்த பேரணியில் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரியும், எஸ்.ஐ.ஆர் முறைகேடு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த பேரணி நடைபெற உள்ளது. இந்த பேரணியில் கலந்துகொள்ளப் ப…