IBC Tamil
திருகோணமலையில்"இராவணன் கோட்டம்" நூல் வெளியீடு
திருகோணமலை தமிழ்சங்கத்தின் ஏற்பாட்டில், மூத்த எழுத்தாளர் திருமலை நவம் எழுதிய "இராவணன் கோட்டம்" என்ற கன்னியா தொடர்பான தொல்லியல் ஆய்வு நூலின் வெளியீட்டு விழா இன்று (31) சனிக்கிழமை காலை திருகோணமலை மாநகராட்சி மன்ற கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. தமிழ் சங்கத்தின் துணைத்தலைவர் கவிஞர் க. யோகானந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், முதன்மை அழைப்பாளராக கிழக்கு மாகாண கல்வி, பண்பாட்டு, விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் நா. மணிவண்ணன் கலந்துகொண்டார். மேன்மை அழைப்பாளராக, பிரபல தொ...