Dinamani
கொல்கத்தா: ஆகாசா ஏர் விமானத்தின் வால் பகுதி தரையில் மோதியதால் பரபரப்பு!
கொல்கத்தா விமான நிலையத்தில் ஆகாசா ஏர் விமானத்தின் வால் பகுதி தரையில் மோதியதால் பரபரப்பு நிலவியது. அகமதாபாத்திலிருந்து கொல்கத்தா நோக்கி வந்த ஆகாசா ஏர் விமானம், சனிக்கிழமை காலை கொல்கத்தா விமான நிலையத்தில் தரையிறங்கும்போது அதன் வால் பகுதி தரையில் மோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானம் தற்போது விரிவான ஆய்வுக்காக கொல்கத்தா விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அகமதாபாத்தில் இருந்து கொல்கத்தா வந்த…