Nakkheeran
'மின்கட்டணத்தை கேட்டாலே ஷாக் அடிக்குது'- தவெகவை வறுத்தெடுத்த எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான மின்வெட்டு மற்றும் மின்கட்டண உயர்வைக் கண்டித்து, எடப்பாடி பழனிசாமி தவெகவை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். செங்கல்பட்டு பகுதியில் நடைபெற்ற அஇஅதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், ''தற்போதைய ஆட்சியில் மின்சாரம் எப்போது வரும் எப்போது போகும் என்றே தெரியாத ஒரு அவல நிலை நீடித்து வருகிறது. மின்சாரத்தை தொட்டால்தான் கடந்த காலங்களில் மக்களுக்கு ஷாக் அடிக்கும். ஆனால் இந்த ஆட்சியில் மின்கட்டணத்தைக் கேட்டாலே மக்களுக்குத் தூக்கிவாரிப் போடும் அளவிற்கு ஷாக் அடிக்கிறது. நான் பேசி முடிக்கிற வரைக்குமாவது இந்த ஆட்சியில் மின்சாரம் தடைப்படாமல் இருக்க வேண்டும்…