Nakkheeran
”97 வழக்குகள்... 6 மாதத்தில்... 23 பேருக்கு...”; நீதிபதிக்கு திடீர் இட மாற்ற உத்தரவு
குற்றம் செய்த நபர்களுக்குப் பாரபட்சம் பார்க்காமல் அதிரடியாக அதிகபட்ச தண்டனைகளை வழங்கி, குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியவர் நீதிபதி ரவிகுமார் திவாகர். உத்திர பிரதேச மாநிலத்தில், முசாபர் நகரில் உள்ள விரைவு நீதிமன்றத்தில் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாக பணிபுரிந்தவர் ரவிக்குமார் திவாகர். இவர் தனது பணிக்காலத்தில் ஏராளமான வழக்குகளை விசாரணை செய்து, அவ்வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளார். குறிப்பாக, பல்வேறு குற்ற வழக்குகளை விசாரணை செய்த அவர், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை வழங்கியிருந்தார். அந்த வகையில், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாத காலத்தில…