Nakkheeran
விபத்தில் சிக்கிய ராகுல் காந்தியின் கான்வாய்; நீதிமன்றத்துக்கு செல்லும் போது பரபரப்பு சம்பவம்!
நீதிமன்றத்திற்கு செல்லும் போது ராகுல் காந்தியின் வாகனம் விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது, காங்கிரஸ் கட்சியின் சார்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக பா.ஜ.க.வைச் சேர்ந்த விஜய் மிஸ்ரா, உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் இந்த வழக்கு தொடர்பான விசாரணை 8 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில், இன்று (26-10-26) மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணைக்காக ஆஜர…