IBC Tamil
ஒலி அலைகளால் தீயை அணைக்கும் புதிய கருவி: மெக்சிகோ மாணவியின் சாதனை
தண்ணீர் அல்லது இரசாயனப் பொருட்கள் எதனையும் பயன்படுத்தாமல், ஒலி அலைகளை மட்டுமே கொண்டு தீயை அணைக்கும் புதிய தொழில்நுட்பக் கருவியை உருவாக்கி மெக்சிகோவைச் சேர்ந்த 17 வயது பாடசாலை மாணவி ஒருவர் சாதனை படைத்துள்ளார். மெக்சிகோவின் தமோலிபாஸ் மாகாணம், அல்தாமிரா பகுதியைச் சேர்ந்த மேல்நிலைப் பாடசாலை மாணவியான ஏஞ்சலா வெனகாஸ் ஹெர்னாண்டஸ் என்பவரே இந்தப் புதிய தீயணைப்புக் கருவியை உருவாக்கியுள்ளார். இவர் வடிவமைத்துள்ள கருவியில் 12 வோல்ட் மின்கலம், அதிர்வெண் உருவாக்கி (Frequency Generator), ஒ...