Nakkheeran
கே.என்.நேருக்கு பேரிடி கொடுத்த நீதிமன்றம்; வெளியான அதிரடி உத்தரவு!
கடந்த திமுக ஆட்சியின் போது நகராட்சி நிர்வாகத்துறையில் உதவிப் பொறியாளர்கள் மற்றும் இளநிலைப் பொறியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் நியமனத்திற்கு ரூ.634 கோடி லஞ்சம் பெற்றதாகக் கூறி, அத்துறையின் அமைச்சராக இருந்த கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி அமலாக்கத்துறை, கடந்த ஆட்சியின் போது லஞ்ச ஒழிப்புத்துறைக்குக் கடிதம் அனுப்பியது. இருப்பினும், லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்யவில்லை. இதையடுத்து, அமலாக்கத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது. இதையடுத்து இந்த வழக்கில் அமலாக்கத்துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டது. ஆனால் இந…