Nakkheeran
நினைவு நாள் உணவு உபசரிப்பில் தகராறு; தாய்மாமன் கத்தியால் வெ*ட்டியதில் வாலிபர் படுகாயம்!
சிதம்பரம் அருகே நினைவு நாள் உணவு உபசரிப்பின்போது ஏற்பட்ட தகராறில், தாய்மாமன் கத்தியால் வெட்டியதில் வாலிபர் படுகாயமடைந்தார். இதில் அவரது கைவிரல் துண்டிக்கப்பட்டது. கடலூர் மாவட்டம், சிதம்பரம் உட்கோட்டம், அண்ணாமலை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு பிச்சாவரம் செஞ்சி பகுதியை சேர்ந்த ராயர் மகன் அன்பரசன் (29). இவரது உறவினர் ரமேஷ் என்பவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது நினைவு நாள் மற்றும் தீபாவளி துக்க நிகழ்ச்சியை முன்னிட்டு உணவு உபசரிப்பு நடைபெற்றது. அப்போது அங்கு வந்திருந்த உறவினர்கள் மது போதையில் ஒருவரையொருவர் கேலி, கிண்டல் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அன்பரசனுக்கும், அவரது தாய்மா…