Indian Express Tamil
உத்தராகண்ட் விபத்தில் திருப்பம்: முன் பின் இயக்கப்பட்ட விமானங்கள் தப்பியது எப்படி? விசாரணை தீவிரம்
Vidheesha Kuntamalla உத்தராகண்ட் மாநிலத்தின் ஸ்தான் மார்வாடிப் பகுதியில் வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளான 'டிரான்ஸ் பாரத் ஏவியேஷன்' (Trans Bharat Aviation) நிறுவனத்தின் ஹெலிகாப்டர் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, பத்ரிநாத்திலிருந்து புறப்பட்ட வேறு இரண்டு ஹெலிகாப்டர்கள் பத்திரமாகத் தங்களது இலக்குகளைச் சென்று அடைந்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனத்திற்குத் தெரியவந்துள்ளது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் புறப்பட்ட 8 நிமிடங்களுக்குப் பிறகு ஒரு ஹெலிகாப்டரும், சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மற்றொரு ஹெலிகாப்டரும் புறப்பட்டுச் சென்றுள்ளன. மேலும், இந்த விமானத்திற்கு முன்பாகப் பயணத்தைத் தொடங்கி…