Indian Express Tamil
முரசு புயலின் வெளிப்புற கற்றை சென்னை நோக்கி... திங்கள் காலையில் இந்த ஏரியாவில் மழையை எதிர்பாருங்க மக்களே..!
வங்கக்கடலில் உருவாகியுள்ள 'முரசு' புயல் ஆந்திரக் கடற்கரையை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், சென்னை மற்றும் வட தமிழகத்தில் இதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து தன் சமூகவலைதள பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது; "வழக்கமாகப் புயல் நம்மை நெருங்கிச் சென்று கரையை கடக்கும் போது கடுமையான வெயில் மறைந்து நல்ல குளிர்ந்த காற்றுடன் கூடிய மழைக்காலம் போல மாறும். அதேபோல்தான் இப்போதும் நடக்கப் போகிறது. புயலின் முக்கிய மேகங்களும், பலத்த மழையும் கடலிலேயே சென்று தெற்கு - மத்திய ஆந்திரக் கடற்கரையைத் தாக்கும்.…