Hindu Tamil Thisai
சென்னை: வீட்டைவிட்டு வந்த மாணவிகள் மீட்பு
சென்னை: கீழ்ப்பாக்கம் முருகன் மருத்துவமனை அருகே நேற்று முன்தினம் இரவு 2 சிறுமிகள் சுற்றித் திரிந்தனர். அப்போது, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கீழ்ப்பாக்கம் காவல் நிலைய காவலர் வசந்த், அவர்களிடம் விசாரித்தார். இருவரும் வேலூர் மாவட்டத்தில் இருந்து தனியாக ரயில் மூலம் சென்னை வந்தது தெரியவந்தது. இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, பெண் காவலர்கள் உதவியுடன் விசாரணை நடத்தப்பட்…