Indian Express Tamil
இலவச அனுமதி: மெரினா கடற்கரையில் கோலாகலமாகத் தொடங்கும் தமிழ்நாடு நாள் விழா
சென்னை: தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறை சார்பில், சென்னை மெரினா கடற்கரையில் இன்று (நவம்பர் 1, 2026) கோலாகலமாக 'தமிழ்நாடு நாள் விழா' நடைபெற உள்ளது. தமிழ்நாட்டின் பாரம்பரியம் மற்றும் நாட்டுப்புறக் கலைகளைப் போற்றும் வகையில் இந்தச் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் இந்த விழாவில், பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ள இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கலை பண்பாட்டுத் துறை வழியாக நாட்டுப்புறக் கலைஞர்களைக் கொண்டு எழிலார்ந்த முறையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. தமிழ்நாடு நாள் விழா - மெரினா கடற்கரை, சென்னை.#CMJosephVijay | #TNDI…