Indian Express Tamil
அன்பில் மகேஷ் சிறையில் அடைப்பு: இரவில் நீதிமன்றத்தில் நடந்த வாதம்; தி.மு.க-வினர் திரண்டு கோஷம்
தமிழகத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், தரம் உயர்த்துதல் மற்றும் இதர அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கும் மேல் முறைகேடாக பணம் வசூலித்த வழக்கில், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் அனுமதி சான்றிதழ்கள் வழங்க லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் அன்பில் மகேஷ் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக கடந்த செப்டம்பர் 16…