உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

அழகிரி மகள் கயல்விழி வங்கி மேலாளரைக் அறைந்த வழக்கு: இறுதி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை அடையாறு சாஸ்திரி நகர் எஸ்.பி.ஐ வங்கிக் கிளையின் மேலாளரைத் தாக்கியது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி மீது பதியப்பட்ட வழக்கில், நான்கு வாரங்களுக்குள் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. சென்னை அடையாறு பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ) கிளையின் கட்டட உரிமையாளராக கயல்விழி இருந்து வருகிறார். வங்கியின் மண்டல வணிக அலுவலகத்தின் முதன்மை மேலாளர் நமச்சிவாயம் அளித்த புகாரின்படி, கடந்த ஜூலை 21-ம் தேதி வங்கிக் கிளையில் பழுதடைந்த லிஃப்ட்-டை சீரமைப்பது தொடர்பாக இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. வங்…