உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

"போக்சோ, போதைப்பொருள் வழக்குகளை விரைந்து விசாரிக்க புதிதாக 30 சிறப்பு நீதிமன்றங்கள்" - தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், போக்சோ மற்றும் போதைப்பொருள் தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரிக்க 30 புதிய சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதில், 47 கோடி ரூபாய் மதிப்பில் 26 மகிளா மற்றும் போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளன. தமிழகத்தில் இவ்வகை சிறப்பு நீதிமன்றங்கள் 26 இயங்கிவரும் நிலையில், இந்த உத்தரவின் மூலம் விரைவில் அந்த எண்ணிக்கை 52 ஆக உயர உள்ளது. பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டோருக்கு விரைவில் நீதி கிடைக்க தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதேபோல், போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஏற்கனவே 11 சிறப்பு நீதிமன்றங்…