உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனிய நகரில் உணவு, மின்சாரம் தட்டுப்பாடு..

கடந்த 4 ஆண்டுகளாக ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் ஒலெஷ்கி நகரில் உணவு, குடிநீர், மின்சாரம் போன்றவற்றுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால், மக்கள் வாழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஏவுகணை தாக்குதலால் ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்த நிலையில், போர் தீவிரமடைந்துள்ளதால் பெரும்பாலானோர் அங்கிருந்து வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது. தற்போது 2,000 பேர் மட்டுமே வசித்துவரும் நிலையில், உக்ரைன் மற்றும் ரஷ்ய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரஸுக்கு விமானங்கள் மூலம் அனுப்பப்பட்டுவருகின்றனர்.