Hindu Tamil Thisai
மணிப்பூரில் இரு குழுக்களிடையே மோதல் - மூவர் சுட்டுக் கொலை
இம்பால்: மணிப்பூரில் இருவேறு குழுக்களுக்கு இடையே சனிக்கிழமை நடைபெற்ற மோதலில் குகி சமூகத்தை சேர்ந்த மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் மணிப்பூர் மாநிலத்தின் நோனி மாவட்டத்தில் உள்ள கெக்ரு நாகா கிராமத்தில் நடந்துள்ளது. அதிகாலை நேரத்தில் தொடங்கிய இந்த மோதல், பல மணி நேரம் நீடித்துள்ளது. இந்த சூழலில் சம்பவ இடத்தில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல் துறையினர்…