Nakkheeran
“தமிழக மக்களின் உயிர் காக்க முன்வருமா தவெக அரசு?” - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!
நோய் தீர்க்கும் மருந்துகளின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்காமல் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் உயிரோடு விஜயின் அரசு விளையாடி வருவதாக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, “மக்கள் உயிர் காக்கும் மருந்துகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள், மருந்துகளின் உற்பத்தி விலையை பலமடங்கு உயர்த்தி விற்பனை செய்து லாபம் ஈட்டுவதாகச் செய்திகள் வந்தவுடன், ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு மலிவு விலையில் உயிர் காக்கும் மருந்துகள் சென்றடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில், ஜெயலலிதா 2014-ஆம் ஆண்டு கூட்டுறவுத் துறை மூலம், ‘அம்மா மருந்…