Hindu Tamil Thisai
புதுச்சேரி விடுதலை நாள் - காரைக்காலில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் ராஜசேகரன் பங்கேற்பு
காரைக்கால்: "புதுச்சேரியின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது” என காரைக்காலில் நடைபெற்ற புதுச்சேரி விடுதலை நாள் விழாவில் புதுச்சேரி வேளாண் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் தெரிவித்தார். பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்த புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய பிராந்தியங்கள் 1954 நவ.1-ம் தேதி இந்தியாவுடன் இணைந்தன. அதனால் நவ.1-ம் தேதியன்று புதுச்சேரி விடுதலை நாளாக அரசு சார்பில் கொண்டாடப்பட…