Polimer News
தீபாவளி பரிசுப் பெட்டகங்களில் இடம்பிடித்த கோவில்பட்டி கடலைமிட்டாய்..!
தீபாவளி நெருங்கி வரும் நிலையில், பல்வேறு சுவைகளில் கோவில்பட்டி கடலைமிட்டாய் தயாரிப்பும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கோவில்பட்டி கடலைமிட்டாய்க்குப் புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்றதிலிருந்து உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் ஆர்டர்கள் வருவதாக உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். இந்த ஆண்டு பாதாம், முந்திரி, கருப்பு கவுணி, முருங்கைக்கீரை என 12 வகைகளில் கடலைமிட்டாய்கள் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வழங்கும் பரிசுப் பெட்டகங்களில் கோவில்பட்டி கடலைமிட்டாயும் இணைந்துள்ளது.