Polimer News
நாங்குநேரியில் சாலையில் நடந்து சென்ற முதியவர் வெட்டிக்கொலை..!
நாங்குநேரியில் சாலையில் நடந்துசென்ற முதியவரை ஹெல்மெட் அணிந்து வந்த நபர் அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டுத் தப்பியோடிய நிலையில், போலீஸ் விசாரணையில், சொந்த பேரனே சொத்து தகராறால் தாத்தாவை கொலை செய்தது தெரியவந்துள்ளது. தளவாய் என்ற முதியவருக்கு 3 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு அதிக நகைகளை சீர்வரிசையாக கொடுத்ததால், அவரைத் தவிர்த்து விட்டு மற்ற இரு மகள்களுக்கும் அவர் தனது சொத்தை பிரித்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த மூத்த மகளின் மகனான கிருஷ்ணராஜா, சொத்தில் பங்கு கேட்டுத் தகராறு செய்துவந்த நிலையில், முதியவரை வெட்டிக்கொன்றதாக கூறப்படுகிறது.