Indian Express Tamil
பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக குற்றங்கள்; விரைந்து விசாரிக்க 26 ஸ்பெஷல் கோர்ட்: விஜய் உத்தரவு
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்திடவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான நீதி பெற்றுத் தரவும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து பல்வேறு முக்கிய முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, முதலமைச்சர் விஜய் உத்தரவுக்கு இணங்க, தமிழகத்தில் போக்சோ மற்றும் போதைப்பொருள் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிப்பதற்காகப் புதிய சிறப்பு நீதிமன்றங்களை அமைத்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டம், 2012-ன் (POCSO Act) கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை மட்டும் விரைவாக விசாரிப்பதற்காக, தமிழகம் முழுவதும் புதிதாக 26 சிறப்பு நீத…