Daily Thanthi
வங்கக்கடலில் உருவானது ‘முரசு’ புயல் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
சென்னை, வடகிழக்குப் பருவமழை காலத்தின் முதல் புயல் வங்கக்கடலில் கடந்த 25-ந்தேதி உருவானது. இந்த புயல் ஆந்திராவை யொட்டிய பகுதிகளில் கரையை கடந்து சூறாவளி காற்று, மழையை கொடுத்தது. அதனைத் தொடர்ந்து வங்கக்கடலில் 2-வது புயல் தற்போது உருவாகியுள்ளது. தெற்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய நிகோபர் தீவுகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று முன்தினம் உருவானது. இது தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும், காற்றழுத்த தாழ்வு…