Daily Thanthi
வரலாற்று சிறப்பு மிக்க நாள்: தமிழ்நாடு தின வாழ்த்துகள் தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
சென்னை, கம்யூனிஸ்டுகள் மக்களைத் திரட்டி உறுதியோடு போராடியதன் காரணமாக மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். மொழிவாரி மாநிலங்கள் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- இந்தியா பல்வேறு மொழிகள் பேசும் பல்வேறு தேசிய இனங்கள் ஒருங்கிணைந்து வாழ்ந்து வரும் நாடாகும். ஒவ்வொரு தேசிய இனத்தின் மொழி,பண்பாடு,வரலாற்று ரீதியான மனப்பாங்கு…