Indian Express Tamil
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 கனவா? அரசின் இலவச ஆன்லைன் டெஸ்ட் சீரிஸ்: உடனே அட்டவணை பாருங்க
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்குத் தயாராகி வரும் மாணவர்களுக்கு அரசாங்கம் ஒரு சூப்பரான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பாக, குரூப் 4 தேர்வுக்கான இலவச இணையவழித் தேர்வுத் தொடர் (Test Series) அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 3, 2026 முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 3, 2027 வரை இந்த ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இந்தத் தேர்வுத் தொடரின் முக்கிய அம்சங்கள் இதோ: டிஎன்பிஎஸ்சி தேர்வுத் தரத்தில் மொத்தம் 25 முழுமையான தேர்வுகள் நடத்தப்படுகின்றன. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள பொதுத்தமிழ் பாடங்கள் பாடம் மற்றும் அலகு வாரியாக கவர் செய்யப்படுகிறது. பொது அறிவு (G…