Vikatan
நெல்லை: ஆம்னி பஸ்ஸை நடுவழியில் நிறுத்திய ஓட்டுநர்; போலீஸுடன் வாக்குவாதம்... தவித்த பயணிகள்!
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னைக்கு தனியார் பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதேநேரம் விழாக் காலங்களில் தனியார் பேருந்துகள் விதிமுறைகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகளும், பொதுமக்களிடமிருந்து புகார்களும் எழுந்தவண்ணமிருக்கின்றன. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவில் நாகர்கோவிலிருந்து திருநெல்வேலி வழியாக சென்னைக்கு வந்துகொண்டிந்த தனியார் பேருந்து ஒன்று, நெல்லை வண்ணாரப்பேட்டை அருகே இருளான பகுதியில் நிறுத்தப்பட்டது…