Indian Express Tamil
அரசியல் விமர்சகர் கலை மரணம்: ஊடகவியலாளர்கள் இரங்கல்
தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த பிரபல அரசியல் விமர்சகர் கலை, உடல்நலக் குறைவால் மதுரையில் உள்ள அவரது சொந்த ஊரில் ஞாயிற்றுக்கிழமை (01.11.2026) காலமானார். அவரது மறைவுக்கு ஊடகவியலாளர்களும் அரசியல் பிரமுகர்களும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் அதிமுக சார்புநிலை உரையாடல்கள் மூலம் பரவலாக அறியப்பட்ட பிரபல அரசியல் விமர்சகர் கலை, உடல்நலக் குறைபாடு காரணமாக மதுரை அருகே உள்ள அவரது சொந்த ஊரில் உயிரிழந்தார். அரசு வேலையைத் துறந்து அரசியல் விமர்சனத் துறையில் இயங்கி வந்த இவரது திடீர் மறைவு, ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் சோகத்தையும்…