உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

டைல்ஸ்ல பெயிண்ட், சிமெண்ட் கறை பிடிச்சிருக்கா? தேய்க்காமலேயே நீக்க இந்த ட்ரிக்ஸ் போதும்

வீட்டை புதுப்பிக்கும்போதோ, சுவர்களுக்கு புதிதாக வண்ணம் பூசும்போதோ தரை மற்றும் சுவர் டைல்ஸ்களில் பெயிண்ட், சிமெண்ட் கறைகள் படிவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகிறது. குறிப்பாக, புதிதாகப் போடப்பட்ட டைல்ஸ்களில் சிமெண்ட் தெறிப்புகள், பெயிண்ட் துளிகள் படிந்துவிட்டால் அவற்றை அகற்றுவது சற்று சிரமமாக இருக்கும். சாதாரணமாகத் தண்ணீர் ஊற்றித் துடைத்தாலும் சில பிடிவாதமான கறைகள் நீங்காமல் அப்படியே இருக்கும். இதற்காக அதிக விலை கொடுத்து சுத்தம் செய்யும் பொருட்களை வாங்கவோ, தொழில்முறை நிபுணர்களை அழைக்கவோ வேண்டிய அவசியமில்லை. கறையின் தன்மை, டைல்ஸ்களின் வகை மற்றும் கறை படிந்து எவ்வளவு நாட்களாகின்றன என்பதைப் பொறுத…