Indian Express Tamil
நவம்பர் 1 தமிழ்நாடு நாள்: மோடி, ராகுல் காந்தி, இ.பி.எஸ் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
நவம்பர் 1-ஆம் தேதி தமிழ்நாடு தினம் கொண்டாடப்படுவதை ஒட்டிப் பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளனர். அதேவேளையில், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்நாளை எல்லைப் போராட்டத் தியாகிகள் நினைவு நாளாகக் குறிப்பிட்டு வீரவணக்கம் செலுத்தியுள்ளார். இதனிடையே, 1956-ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1 எல்லைப் போராட்டத் தியாகிகளுக்கான நாள் என்றும், 1967-ல் அண்ணாவால் 'தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஜூலை 18 மட்டுமே அதிகாரப்பூர்வ 'தமி…