Daily Thanthi
தேர்வு எழுதச் சென்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம்... மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழப்பு!
ஈரோடு, ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பாதையில் மோட்டார் சைக்கிளும், பிக்கப் வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் வனக்காப்பாளர் பரிதாபமாக உயிரிழந்தார். குரூப் 2 தேர்வு எழுதுவதற்காகச் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஈரோடு மாவட்டம், அய்யம்பாளையம் அருகே உள்ள வடிவுள்ள மங்கலம், குன்னிக்காட்டுப் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் மகன் நவீன் (27). இவர் தட்டக்கரை வனச்சரகத்தில் வனக்காப்பாளராகப் பணியாற்றி வந்தார். குரூப்…