Polimer News
முதலமைச்சர் விஜய் நவம்பர் 3 ஆம் தேதி ஈரோட்டில் ரோடு ஷோ..
முதலமைச்சர் விஜய், வரும் நவம்பர் 3 ஆம் தேதி, ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு வருகை தந்து, ஆயிரத்து110 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இதையொட்டி, அவர் கோவையிலிருந்து பெருந்துறை வரும் வழியில் பொதுமக்களை நேரில் சந்திப்பதற்காக 7 முக்கிய இடங்களில் பிரம்மாண்ட ரோடு ஷோ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. செங்கம்பள்ளி பாலத்திலிருந்து துவங்கி, பெருந்துறை புற வழி சாலை, சிப்காட் ரவுண்டானா, பழைய பேருந்து ரவுண்டானா, புதிய பேருந்து ரவுண்டானா, ஜி எச் ரவுண்டானா மற்றும் பணிக்கம்பாளையம் ஆகிய இடங்களில் பொதுமக்களை முதலமைச்சர் சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.