Indian Express Tamil
அமைச்சர் ராஜ்மோகனுக்கு ரூ 5 கோடி கொடுக்க முயற்சியா? லயோலா மணி இதுபற்றி உடனே விஜிலன்ஸில் புகார் கொடுக்க வேண்டும்: தி.மு.க கருத்து
ரூ. 5 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ள நிலையில், இதுபற்றி உடனே விஜிலன்ஸில் புகார் கொடுக்க வேண்டும் என தி.மு.க வலியுறுத்தியுள்ளது. சென்னை எழும்பூரில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் விழாவில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “இயல் இசை நாடக மன்ற தலைவர் பதவியை எனக்கு கொடுக்க சொல்லுங்கள், அமைச்சர் ராஜ்மோகனுக்கு ரூ. 5 கோடி தருகிறேன் என ஒருத்தர் பேசினார். இது லயோலா மணிக்கும் தெரியும். ஆனால் 500 கோடி கொடுத்தாலும், பொருத்தமில்லாத ஒருவருக்கு முதல்வர் விஜய் எந்த பதவியையும் தரமாட்டார். பொருத்தமுள்ள புஷ்பவனம் குப்புசாமிக்கு தான் ஒரு ரூபாய் காசு வாங்காமல் தரப்பட்டது,” என்று கூறினார். அமைச்சர் ரா…