Polimer News
பட்டாசு கழிவுகளைப் பாதுகாப்பாகச் சேகரிக்க நடவடிக்கை..!
சென்னையில் தீபாவளி பட்டாசு கழிவுகளைப் பாதுகாப்பாகச் சேகரிப்பதற்காக, 20 ஆயிரம் சணல் சாக்கு பைகளை வாங்குவதற்கு, சென்னை மாநகராட்சி அதிகாரப்பூர்வ டெண்டர் கோரியுள்ளது. டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள் சணல் சாக்குப்பைகளை நேரடியாகத் தயாரிப்பவராகவோ அல்லது விற்பனையாளராகவோ இருக்க வேண்டும் உள்ளிட்ட வரைமுறைகளை சென்னை மாநராட்சி விதித்துள்ளது.