IBC Tamil
இலங்கையில் நூழிழையில் காப்பாற்றப்பட்ட இரண்டு இந்திய பிரஜைகள்
மிரிஸ்ஸ கடற்கரையில் குளித்துக்கொண்டிருந்த இரு இந்தியர்கள், பலமான கடல் நீரோட்டத்தினால் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், காவல்துறை உயிர் காக்கும் பிரிவினரால் (lifeguards) மீட்கப்பட்டனர். இன்று சனிக்கிழமை (31) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், 28 மற்றும் 29 வயதுடைய குறித்த இரு நபர்களும் பலமான நீரோட்டத்தில் சிக்கி, கரையிலிருந்து வெகுதூரம் இழுத்துச் செல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். பாதுகாப்பாக மீட்பு கோட்டவில காவல்துறை உயிர் காக்கும் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் உடனடிய...