Indian Express Tamil
வலிப்பு வந்ததாக கூறி நாடகம்: தேனி சிறையை உடைத்து 17 கைதிகள் தப்பி ஒட்டம்: காவலருக்கு மண்டை உடைப்பு
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி மாவட்ட சிறைச்சாலையில், சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு 17 விசாரணை கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேக்கம்பட்டி சிறையில் ஒரே அறையில் விழுப்புரத்தைச் சேர்ந்த லிங்கம், ராஜா சிக்கந்தர், கருப்பசாமி, சிலம்பரசன், திருப்பதி, மீனாட்சி சுந்தரம், சபரி உள்ளிட்ட 17 விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். திங்கள் கிழமை (அக். 26) இரவு 10.30 மணியளவில், கைதி ஒருவருக்குத் திடீரென வலிப்பு ஏற்பட்டதாகக் கூறி சத்தமிட்டுள்ளனர். இதைக் கேட்டு சிறைக் காவலர் தங்கப்பாண்டி உட்பட மூன்று காவலர்கள் கதவைத் திறந்து உள்ளே சென்றுள்ளன…