Indian Express Tamil
இந்த தீபாவளிக்கு என்ன பட்டுப்புடவை வாங்கலாம்? காஞ்சிபுரம் முதல் பனாரஸ் வரை... டிரெண்டிங்கில் இருக்கும் 7 ரகங்கள்
தீபாவளி என்றாலே புத்தாடைகள், பலகாரங்கள், பட்டாசுகள் எனப் பண்டிகைக் கொண்டாட்டங்கள் களைகட்டும். அதிலும் பெண்களைப் பொறுத்தவரை தீபாவளிக்கு பட்டுப்புடவை அணிவது என்பது தனி மகிழ்ச்சிதான். ஆனால், பட்டுப்புடவை வாங்கக் கடைக்குச் சென்றால் காஞ்சிபுரம், பனாரஸ், மைசூர், துசார், பைதானி எனப் பல்வேறு ரகங்கள் அணிவகுத்து நிற்கும். இதில் எந்தப் புடவையைத் தேர்வு செய்வது, எந்த நிறம் நமக்குப் பொருத்தமாக இருக்கும், அதிக நேரம் அணிந்திருந்தாலும் வசதியாக இருக்குமா என்ற கேள்விகள் எழுவது இயல்புதான். 2026-ம் ஆண்டு தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் பாரம்பரிய கைத்தறி நெசவுகளுடன், இலகுவான பட்டுப்புடவைகள், மென்மையான நிறங்கள், பெர…