Hindu Tamil Thisai
வங்கக் கடலில் உருவானது ‘முரசு’ புயல் - ஒடிசாவின் தெற்கு பகுதிகளுக்கு தீவிர எச்சரிக்கை
புதுடெல்லி: வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ‘முரசு’ புயலாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியா பெயரிட்டுள்ள ‘முரசு’ புயல், வங்கக் கடலில் உருவாகி உள்ளது. இது தீவிரமடைந்து மிகத் தீவிர புயலாக மாறக்கூடும். நவ. 3ம் தேதி காலை நெல்லூர் மற்றும் நரசபூருக்கு இடைப்பட்ட கடற்கரையை வந்தடையும். புயல் கரையை…