உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

ஒரே நாளில் 3 பைக்குகள் திருட்டு : சி.சி.டி.வி.யில் சிக்கிய ஒற்றைச் சாவி திருடன்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் நகை, பணம் கொள்ளை, பைக திருட்டுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் அறந்தாங்கி பகுதியில் தினமும் ஒரு திருட்டுச் சம்பவம் நடப்பதால் பொதுமக்கள் ரொம்பவே அச்சத்தில் உள்ளனர். தீபாவளி நேரத்தில் திருட்டுகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. அறந்தாங்கி அக்னி பஜார் பகுதியில் சனிக்கிழமை காலை நேரத்தில் ஒரு பைக் திருட்டுப் போனது. மாலையில் டிஎஸ்பி அலுவலகம் - காவல்நிலையம், செல்லும் சாலையில் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு பிரபலமான பேக்கரியில் ஊழியராக வேலை செய்யும் எல்.என்.புரம் மணிகண்டன் சந்து தூரத்தில் உள்ள குறுக்கு சாலை ஓரம் வழக்கம் போல தனது பைக்கை நிறுத்திவிட்டு வேலைக்…