Indian Express Tamil
ஊரக வளர்ச்சித் துறை வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் உடனே விண்ணப்பிங்க
தமிழக அரசின் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் (TNSRLM) கரூர் மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் மேலாளர் மற்றும் கணக்காளர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 03.11.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலாளர் காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: பொருளாதாரம்/ வணிகம்/ சந்தைப்படுத்தல் துறையில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 15,000 கணக்காளர் காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: வடிவமைப்பு மென்பொருள் அறிவு உள்ள பட்டதாரியாக இருக்க வேண்டும். சம்பளம்: ரூ.…