உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

தாம்பரத்தில் புதிய மருத்துவக் கல்லூரி; 'நலம் ஏ.ஐ' மூலம் மருந்துகள் பெற புதிய வசதி: அருண்ராஜ் பேட்டி

சென்னை தாம்பரம் மாவட்ட அரசு மருத்துவமனையை முழுமையான அரசு மருத்துவக் கல்லூரியாக உயர்த்தத் தமிழ்நாடு அரசு பரிசீலித்து வருவதாகவும், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் நீண்ட நேரம் வரிசையில் நிற்பதைத் தவிர்க்க 'நலம் ஏ.ஐ' டிஜிட்டல் தளத்தை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் அருண்ராஜ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் அருண்ராஜ், தாம்பரத்தில் புதிய மருத்துவக் கல்லூரி அமைப்பது தொடர்பான கோரிக்கை அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளதாகத் தெரிவித்தார். இது குறித்து முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யுடன் விரிவாக ஆல…