Hindu Tamil Thisai
சேந்தமங்கலம் தொகுதியில் வெற்றி விருந்து விழா: 2 ஆயிரம் பேருக்கு விருந்து வைத்த எம்எல்ஏ
நாமக்கல்: சேந்தமங்கலம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சந்திரசேகர், வெற்றி விருந்து விழா என்ற பெயரில் நேற்று கிடா வெட்டி 2 ஆயிரம் பேருக்கு விருந்து வைத்தார். தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைந்த பிறகு செயல்படுத்தும் திட்டங்களின் பெயர்களில் வெற்றி என்ற வார்த்தை இணைத்து அறிவிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பேருந்துகளில் பெண்களுக்கு வெற்றிப் பயணம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது…